தன்னை ராஜாவாக நினைத்தாலும் ஊழலுக்காக அசாம் முதல்வரை மக்கள் சிறைக்கு அனுப்புவார்கள்: ராகுல் காந்தி ஆவேசம்
மாநிலத்தில் தற்போதைய பாஜ ஆட்சி ஊழலில் ஈடுபட்டு வருகின்றது. மக்களுக்கு அநீதி இழைத்தவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். எனவே அவர்கள் சிறைச்சாலைகளை சரி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்கள் அங்கேயே இருக்க வேண்டியிருக்கும். அசாமில் உள்ள மக்கள் சட்டவிரோத குடியேறிகளை கண்டறியும் போர்வையில் அச்சுறுத்தப்படுகிறார்கள்.
அடுத்த ஆண்டு தேர்தலில் பாஜ தலைமையிலான அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்” என்றார். இதனை தொடர்ந்து பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, ‘‘அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தன்னை ராஜாவாக நினைத்தாலும், ஊழலுக்காக சிறையில் அடைக்கப்படுவார். காங்கிரஸ் அவரை சிறைக்கு அனுப்பாது. ஆனால் மக்கள் அவரை சிறைக்கு அனுப்புவார்கள்” என்றார்.
* டிவிட்டரில் ராகுலுக்கு பதிலடி
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது எக்ஸ் தள பதிவில்,‘‘ நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட பல குற்ற வழக்குகளில் ஜாமீனில் வெளியே இருப்பதை காங்கிரஸ் தலைவர் மறந்துவிட்டார். ராகுல் ஜீ உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.