மழை எதிரொலி: போக்குவரத்து துறையின் வழிகாட்டு நெறிமுறைகள்
சென்னை: வடகிழக்கு பருவ மழை, புயல் முன்னெச்சரிக்கை காரணமாக பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது. பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தல்; சுரங்கப் பாதைகள், மேம்பாலங்களின் கீழ் தண்ணீர் தேங்கியிருந்தால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க வேண்டும்; காட்டாற்று ஓர சாலைகளில் பேருந்தை இயக்கும்போது கவனமாக வெள்ளத்தின் தன்மையை அறிந்து இயக்க வேண்டும்
Advertisement
Advertisement