மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
சென்னை: பள்ளி வளாகங்களில் மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்; பருவமழைக் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பள்ளிகளில் மின் இணைப்புகளை சரிபார்த்தல், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டிகளை மூடுதல் என மாணவர்களின் பாதுகாப்புக்குரிய அம்சங்கள் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும்.
அதேபோல், பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். பருவகால மாற்றங்களால் மாணவர்களுக்கு ஏற்படும் நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கான உரிய அறிவுரைகள் வழங்க எடுக்கவேண்டும். காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ள மாணவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று தொடர் சிகிச்சையை வழங்க வேண்டும் உட்பட வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்கள் பின்பற்றி செயல்பட வேண்டும்.