வத்தலகுண்டில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை: தினசரி காய்கறி மார்க்கெட்டில் வியாபாரம் முடங்கியது
திண்டுக்கல்: வத்தலகுண்டில் நள்ளிரவில் தொடங்கி விடிய விடிய பெய்துவரும் மழையால் தினசரி காய்கறி மார்க்கெட் முடங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் தொடங்கி காலையில் இருந்து பெய்துவரும் மிதமான மழையால் இயல்பு வழக்கை பாதிக்கப்பட்டது. தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரம் மொத்தமாக முடங்கியது. வத்தலகுண்டு பகுதியில் பகல் வேளையில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. பல்வேறு பகுதியில் மழை பெய்து வந்த நிலையில், வத்தலகுண்டு, நிலக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்யவில்லை.
இந்த நிலையில், வத்தலகுண்டு பகுதியில் நள்ளிரவில் தொடங்கிய அதிகாலை திடீர் என மேகங்கள் சூழ்ந்து, இடி மின்னலுடன் மிதமான மழை பெய்தது. சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து மழை பெய்துவரும் காரணமாக இயல்பு வழக்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தினசரி காய்கறி சந்தை முற்றிலும் முடங்கியுள்ளது. விவசாயிகள் கொண்டுவந்த காய்கறிகளை வியாபாரிகள் ஏலம் விட்டு விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாத சூழல் நிலவியது. இருப்பினும் தொடர்ந்து வந்த வெயில் தாக்கம் இன்று வத்தலகுண்டு பகுதியில் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.