தொடர் மழை காரணமாக கொல்லிமலை அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிப்பு..!!
05:55 PM May 21, 2024 IST
Share
நாமக்கல்: தொடர் மழை காரணமாக கொல்லிமலை அருவிகளில் குளிப்பதற்கு வரும் 23 வரை வனத்துறை தடை விதித்துள்ளது. மாசிலா அருவி, நம்ம அருவி, ஆகாய கங்கை அருவி உள்ளிடவற்றிற்கு செல்லவும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்த நிலையில் வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.