தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மழையால் சேதமடைந்த சாலையை தாமாக முன்வந்து சீரமைத்த மேட்டுப்பாளையம் போக்குவரத்து காவலர்: காவலரின் செயலுக்கு குவியும் பாராட்டு.

 

Advertisement

மேட்டுப்பாளையம்: கோவை,திருப்பூர்,நீலகிரி மாவட்டங்களின் மையப்பகுதியாகவும், தமிழக, கேரள, கர்நாடக மாநிலங்களின் எல்லை பகுதியாகவும், மலைகளின் அரசியாக விளங்கும் ஊட்டியின் நுழைவு வாயிலாகவும் மேட்டுப்பாளையம் இருந்து வருகிறது. இதனால் பணி நிமித்தமாகவும், சுற்றுலாவிற்காகவும், பள்ளி, கல்லூரி செல்வதற்காகவும் மேட்டுப்பாளையத்தை நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.

இந்த நிலையில் தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் பல்வேறு இடங்களில் சாலைகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளித்து வருகின்றன.இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் பேருந்து நிலையம் அருகே சாலைகள் குண்டும்,குழியுமாக இருப்பதை கண்ட போக்குவரத்து காவலர் ராதாகிருஷ்ணன் சமூக பொறுப்புணர்வோடு செயல்பட்டு சிமெண்ட் கலவை மற்றும் ஜல்லிக்கற்களை கொண்டு வந்து பள்ளங்களை நிரப்பி மண் வெட்டியால் சாலையை சீரமைத்தார். பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயல்பட்ட போக்குவரத்து காவலரின் இந்த மனிதநேயமிக்க செயல் பொதுமக்களிடையே வெகுவாக பாராட்டை பெற்று வருகிறது.

போக்குவரத்து காவலரின் இச்செயலை கண்ட வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவிட்டு அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதோடு பொதுமக்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.

Advertisement

Related News