மழையால் சென்னையில் மின்தேவை சரிவு
Advertisement
சென்னை: மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: இந்தாண்டு நவம்பரில் சென்னை நகரின் சராசரி மின் தேவை 3,000 முதல் 3,200 மெகாவாட்டாக இருந்தது. சராசரி மின் நுகர்வு 65 முதல் 70 மில்லியன் யூனிட்களாக இருந்தது. வார நாட்களில் அதிகபட்சமாக 75 மில்லியன் யூனிட்கள் வரை மின் நுகர்வு இருக்கும். தொடர் மழை பெய்ததால் மின் சாதனங்களில் பயன்பாடு வழக்கைத்தை விட சற்று குறைந்தது.
கடந்த 1ம் தேதி சென்னை நகரின் அதிகபட்ச மின் தேவை 2,693 மெகாவாட், மின் நுகர்வு 55.29 மில்லியன் யூனிட்களாகவும், 2ம் தேதி 2,797 மெகாவாட், மின் நுகர்வு 59.54 மில்லியன் யூனிட்களாகவும் பதிவானது. வீடுகளில் மின் விசிறி, ஏசி ஆகியவை இயக்கப்படாமல் இருந்தது. மேலும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டதால் மின் நுகர்வு குறைந்தது. இவ்வாறு பேசினர்.
Advertisement