பெரம்பூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இரும்பு துண்டு: போலீசார் விசாரணை
Advertisement
இதுகுறித்து பெரம்பூர் ரயில்வே இருப்பு பாதை போலீசாருக்கு வருண்குமார் தெரிவித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பூர் ரயில்வே இருப்பு பாதை போலீசார், தண்டவாளத்தில் இரும்பு துண்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அதை பறிமுதல் செய்து, சரக்கு ரயில் செல்லும்போது அதிலிருந்து இரும்பு துண்டு தவறி விழுந்ததா அல்லது நாச வேலை காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement