ரயில் தண்டவாளத்திற்கு இடையில் சோலார் பேனல்களை பொருத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை தொடங்கியது இந்திய ரயில்வே..!!
டெல்லி: ரயில் தண்டவாளத்திற்கு இடையில் சோலார் பேனல்களை பொருத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை இந்திய ரயில்வே தொடங்கி உள்ளது.இந்தியா ரயில் பாதைகள் மின் உற்பத்தி நிலையங்களாக மாறி வருகிறது. இந்தியாவின் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ரயில் பாதைகளுக்கு இடையில் நேரடியாக நீக்கக்கூடிய சோலார் பேனல்களைப் பயன்படுத்தி வருகிறது.
இந்த அணுகுமுறையால் ஆண்டுதோறும் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும், இது 200,000 வீடுகளுக்கு மேல் மின்சாரம் வழங்கும்” என்ற தகவலுடன் இந்திய ரயில்வே ரயில் தண்டவாளங்களுக்கு நடுவே சோலார் பேனல்களை அமைத்து வருகிறது. அந்த வகையில், முதற்கட்டமாக வாரணாசியில் 70 மீட்டர் நீளத்திற்கு மணிக்கு 15kW மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் 28 சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன.