தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இரண்டரை ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய பணிகள் ரூ.16 கோடியில் ரயில் நிலையம் நவீனமயமாவது எப்போது?

*ஜோலார்பேட்டையில் பயணிகள் எதிர்பார்ப்பு
Advertisement

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை ரயில் நிலையம் ரூ.16 கோடியில் நவீனமயமாகும் பணிகள் முடிவடைவது எப்போது? என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட மாநகரங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவை இணைக்கும் முக்கிய ரயில் நிலையமாக விளங்கி வருகிறது.

இவ்வழியாக தினசரி நூற்றுக்கணக்கான சரக்கு மற்றும் பயணிகள் ரயில்கள் கடந்து செல்கிறது. தினசரி வியாபார ரீதியாகவும், பல்வேறு பணிகள் காரணமாகவும் ஏராளமான மக்கள் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வழியாக சென்று வருகின்றனர்.

இதன்மூலம் கோடிக்கணக்கில் ரயில்வே நிர்வாகத்திற்கு வருவாய் கிடைத்து வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். எனவே இந்த ரயில் நிலையத்தை நவீனமயமாக்கவேண்டும் என பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்பேரில் ஒன்றிய அரசின் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின்கீழ் ரூ.16 கோடியில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை நவீனமயமாக்க கடந்த 2023ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. இதையொட்டி மாஸ்டர் பிளான்கள் உருவாக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர், பார்வை குறைபாடு உள்ளவர்கள் உள்ளிட்டோரின் தேவைகளையும் உள்ளடக்கியும், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி, காத்திருப்பு பகுதிகள், கழிப்பறை, லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர், இலவச வைபை ஆகியவற்றை உள்ளடக்கி திட்டம் வகுக்கப்பட்டது.

ஆனால் இவை அனைத்தும் கடந்த இரண்டரை ஆண்டுகளாகியும் மந்தகதியில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பயணிகள் கூறுகையில், `சுமார் இரண்டரை ஆண்டுகளை கடந்தும் ரயில்வே கட்டிட பணிகள் எதுவும் முழுவீச்சில் நடக்கவில்லை. புதிய கட்டிடம் மற்றும் பிளாட்பாரங்கள் அமைப்பதற்காக பழைய கட்டிடங்களும் பிளாட்பாரங்களும் உடைக்கப்பட்டது.

ஆனால் பணிகள் சரிவர நடக்காததால் வெயில், மழையில் காத்திருந்து ரயில் பிடித்து செல்லும் தொடர்கிறது. இதனை ரயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டும், டெண்டர் எடுத்தவர்களை உரிய காலத்திற்குள் பணிகளை முடிக்க அறிவுறுத்தவேண்டும். விரைவில் முழு அளவில் நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

Advertisement