டெல்லி: ரயில் பயணிகளின் ஆதாரை கவனமாக சரிபார்க்க டிக்கெட் பரிசோதகர்களுக்கு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பயணிகளின் ஆதார் அட்டையை எம்ஆதார் என்னும் செயலியை பயன்படுத்தி சரிபார்க்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பயணிகளின் அடையாள அட்டை சரிபார்ப்பு வழிமுறைகளை வலுப்படுத்துவது அவசியம் என்றும் ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டது. ஆதார் சரிபார்ப்பு தொடர்பாக அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டது. ஆள் மாறாட்டம், போலி ஆதார் அட்டைகள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் புதிய நடைமுறை வெளியிடப்பட்டது.