ரயில்வே மருத்துவமனையில் பாரா மெடிக்கல் பணியிடங்கள்
பணியிடங்கள் விவரம்
1. நர்சிங் கண்காணிப்பாளர்: 272 இடங்கள். வயது: 20 லிருந்து 43க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.44,900. தகுதி: ஜெனரல் நர்சிங் மற்றும் மிட்வொய்பரி பாடத்தில் டிப்ளமோ அல்லது நர்சிங் பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. டயாலிசிஸ் டெக்னீசியன்: 4 இடங்கள். வயது: 20 லிருந்து 36க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.35,400. தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் டிப்ளமோ தேர்ச்சியும், 2 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
3. ஹெல்த் மற்றும் மலேரியா இன்ஸ்பெக்டர் கிரேடு- 3: 33 இடங்கள். வயது: 18 லிருந்து 36க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.35,400. தகுதி: வேதியியல் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஹெல்த் இன்ஸ்பெக்ஷன்/சேனிட்டரி இன்ஸ்பெக்ஷன் பாடத்தில் ஒரு வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. பார்மசிஸ்ட்: 105 இடங்கள். வயது: 20 லிருந்து 38க்குள். சம்பளம்: ரூ.29,200. தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் பார்மசி பிரிவில் டிப்ளமோ அல்லது இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5. ரேடியோகிராபர் எக்ஸ்ரே டெக்னீசியன்: 4 இடங்கள். வயது: 19 லிருந்து 36க்குள். சம்பளம்: ரூ.29,200. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் எக்ஸ்ரே டெக்னீசியன்/ரேடியோ டயாக்னசிஸ் டெக்னாலஜியில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
6. இசிஜி டெக்னீசியன்: 4 இடங்கள். வயது: 18 லிருந்து 36க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.25,500. தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் கார்டியாலஜி/இசிஜி லேபரட்டரி டெக்னாலஜி/கார்டியாலஜி டெக்னீசியன் பிரிவில் டிப்ளமோ அல்லது இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
7. லேபரட்டரி அசிஸ்டென்ட் கிரேடு-2: 12 இடங்கள். வயது: 18 லிருந்து 36க்குள். சம்பளம்: ரூ.21,700. தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் எம்எல்டி யில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் சிபிடி தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண் விவரங்கள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
கட்டணம்: பொது/ஒபிசி யினருக்கு ரூ.500/-. எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினர்/மாற்றுத்திறனாளிகள்/ பெண்கள்/ திருநங்கைகள் பிரிவினருக்கு ரூ.250/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
https://www.rrbchennai.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.09.2025.