ரயில்வேயின் துணை நிறுவனத்தில் 252 அப்ரன்டிஸ்கள்
1. டிரெய்ன்டு அப்ரன்டிஸ்: 57 இடங்கள்.
அ. சிவில்: 5 இடங்கள் (பொது-4, ஒபிசி-1).
ஆ. மெக்கானிக்கல்: 23 இடங்கள் (பொது-11, ஒபிசி-6, பொருளாதார பிற்பட்டோர்- 2, எஸ்சி-3, எஸ்டி-1).
இ. எலக்ட்ரிக்கல்: 28 இடங்கள் (பொது-12, ஒபிசி-7, பொருளாதார பிற்பட்டோர்-2, எஸ்சி-4, எஸ்டி-2, மாற்றுத்திறனாளி-1)
ஈ. மற்ற டிரேடுகள்: 1 இடம் (பொது).
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சியளிக்கப்படும் டிரேடில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.
உதவித் தொகை: ரூ.10,000.
2. கிராஜூவேட் அப்ரன்டிஸ் (இன்ஜினியரிங்): 110 இடங்கள்.
அ. சிவில்: 28 இடங்கள் (பொது-12, ஒபிசி-7, பொருளாதார பிற்பட்டோர்-2, எஸ்சி-4, எஸ்டி-2, மாற்றுத்திறனாளி-1)
ஆ. ஆர்க்கிடெக்சர்: 2 இடங்கள் (பொது).
இ. எலக்ட்ரிக்கல்: 37 இடங்கள் (பொது-17, ஒபிசி-9, பொருளாதார பிற்பட்டோர்-3, எஸ்சி-5, எஸ்டி-2, மாற்றுத்திறனாளி-1)
ஈ. சிக்னல் மற்றும் டெலிகாம்: 4 இடங்கள் (பொது-3, ஒபிசி-1)
உ. மெக்கானிக்கல்: 31 இடங்கள் ( பொது-13, ஒபிசி-8, பொருளாதார பிற்பட்டோர்-3, எஸ்சி-4, எஸ்டி-2, மாற்றுத்திறனாளி-1).
ஊ. கெமிக்கல்/மெட்டலர்ஜிக்கல்: 8 இடங்கள் (பொது-5, ஒபிசி-2, எஸசி-1)
தகுதி: பயிற்சியளிக்கப்படும் பொறியியல் பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவித் தொகை: ரூ.14,000.
3. கிராஜூவேட் அப்ரன்டிஸ் (இன்ஜினியரிங் அல்லாத): 36 இடங்கள்.
அ. நிதி: 20 இடங்கள் ( பொது-10, ஒபிசி-5, பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்சி-3, எஸ்டி-1)
ஆ. மனிதவளம்: 16 இடங்கள் (பொது-8, ஒபிசி-4, பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்சி-2, எஸ்டி-1).
தகுதி: பி.ஏ/பிபிஏ/பிசிஏ/பி.காம்/பிஎஸ்சி ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உதவித் தொகை: ரூ.14,000.
4. டெக்னீசியன் அப்ரன்டிஸ்: 49 இடங்கள்.
அ. சிவில்: 11 இடங்கள் (பொது-7, ஒபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்சி-1)
ஆ. எலக்ட்ரிக்கல்: 20 இடங்கள். (பொது-10, ஒபிசி-5, பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்சி-3, எஸ்டி-1)
இ. மெக்கானிக்கல்: 15 இடங்கள் (பொது-8, ஒபிசி-3, பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்சி-2, எஸ்டி-1)
ஈ. கெமிக்கல்/மெட்டலர்ஜிக்கல்: 3 இடங்கள் (பொது).
தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
உதவித் தொகை: ரூ.12,000.
ஐடிஐ/டிப்ளமோ/பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களின் விவரம் இணையதளத்தில் வெளியிடப்படும். நேர்முகத் தேர்வுக்கு வரும் போது தேவையான அசல் சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும். நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி, விபரம் மின்னஞ்சலில் அனுப்பப்படும். சம்பந்தப்பட்ட படிப்பில் பொது மற்றும் பொருளாதார பிற்பட்டோர் ஆகியோர் 60% மதிப்பெண்களுடனும், இதர பிரிவினர்கள் 50% மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பட்டப்படிப்பு/டிப்ளமோ படித்த விண்ணப்பதாரர்கள் முதலில் தங்களுடைய கல்வித்தகுதி பற்றிய விவரங்களை www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஐடிஐ படித்தவர்கள் www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளவும். பின்னர் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ‘ரிட்ஸ்’ இணையதள ‘லிங்க்கை’ பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
2020ம் ஆண்டு நவ.17ம் தேதிக்கு பின்னர் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.apprentice.rites.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.12.2025.