ரயில்களில் பொதுமக்கள் ஆடு, மாடுகளைப் போல் நடத்தப்படுகிறார்கள்: மும்பை உயர்நீதிமன்றம் காட்டம்
01:55 PM Jun 27, 2024 IST
Share
Advertisement
மும்பை: ரயில்களில் பொதுமக்கள் ஆடு, மாடுகளைப் போல் நடத்தப்படுகிறார்கள். இது வெட்கக் கேடானது என கடந்தாண்டு மும்பை புறநகர் ரயிலில் பயணித்த 2,590 பயணிகள் உயிரிழந்தது தொடர்பான பொதுநல வழக்கில் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இது உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய மிக மிக தீவிரமான பிரச்னை. பொதுமக்களின் உயிரைக் காக்க, உத்தரவுக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை எனவும் மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.