தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராகுல்காந்தி அடிக்கடி வியட்நாம் செல்வது ஏன்? பா.ஜ திடீர் கேள்வி

புதுடெல்லி: ராகுல்காந்தி அடிக்கடி வியட்நாம் செல்வது சுவாரசியமாக உள்ளதாகவ பாஜ மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் விமர்சித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய பாஜ தலைவர் மற்றும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில்,``ராகுல் காந்தி எங்கே? அவர் வியட்நாம் சென்றிருப்பதாக கேள்விப்பட்டேன். புத்தாண்டின்போதும், ஹோலி பண்டிகையின்போதும் ராகுல் வியட்நாமில் இருப்பதாக கூறப்படுகின்றது. சுமார் 22 நாட்கள் அங்கு ராகுல் செலவிட்டுள்ளார். அவர் தனது தொகுதியில் கூட இவ்வளவு நாட்களை செலவிடுவதில்லை. திடீரென வியட்நாம் மீது அவருக்கு இவ்வளவு அன்பு இருப்பதற்கான காரணம் என்ன? ராகுல்காந்தி வியட்நாம் மீதான அசாதாரணமான அன்பு என்ன என்பதை விளக்க வேண்டும்.
Advertisement

அந்த நாட்டிற்கு அடிக்கடி ராகுல் சென்று வருவது மிகவும் சுவாரசியமானது. கர்நாடக அரசின் இஸ்லாமிய ஒப்பந்ததாரர்களுக்கான இட ஒதுக்கீடு முடிவின் பின்னணியில் ராகுல்காந்தி இருக்கிறார். எதிர்க்கட்சிகளிடையே போட்டித்தன்மை வாய்ந்த வகுப்புவாத மற்றும் வாக்கு வங்கி அரசியலில் காங்கிரசை வழிநடத்துவதற்கு ராகுல் முயற்சிக்கிறார். இதுபோன்ற முடிவு சிறியதாக தோன்றலாம். ஆனால் இதுபோன்ற முன்னேற்றங்கள் தேசிய அளவில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன” என்றார். இதனிடையே ராகுலின் தனிப்பட்ட பயணங்களை பாஜ அரசியலாக்குவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. ஒரு தனி நபராக அவருக்கு வெளிநாடு செல்வதற்கு உரிமை உள்ளதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

Advertisement

Related News