ராகுல்காந்தியை விமர்சித்த நீதிபதியின் கருத்து சரியல்ல: நடிகர் கிஷோர் சரமாரி கேள்வி
சென்னை: இந்திய ராணுவம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா, ஏ.ஜி.மாய்ஸ் அமர்வு, ‘இந்தியராக இருந்தால், ராணுவத்தை விமர்சித்திருக்க மாட்டீர்கள்’ என்று ராகுல் காந்தியை சரமாரியாக கடிந்துகொண்டனர். இது தொடர்பாக நடிகர் ‘ஆடுகளம்’ கிஷோர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:
‘நீதியின் செய்தி தொடர்பாளராக இருக்க வேண்டிய உச்ச நீதிமன்ற நீதிபதி, ஆளும் கட்சியின் மோசமான அரசியலின் செய்தி தொடர்பாளராக மாறிவிட்டாரா? சீனாவின் ஆக்கிரமிப்புக்கு ஆயிரக்கணக்கான சாட்சிகள் இருந்தபோதிலும், அவர் அரசை நோக்கி ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. மாறாக, அதை அம்பலப்படுத்தியவரை குறிவைக்க அவர் தேர்ந்தெடுத்த கேள்வி, `நீங்கள் ஒரு உண்மையான தேசபக்தராக இருந்தால்...’.
தேர்தல் ஆணையத்தின் துரோகத்தை அம்பலப்படுத்தும் முயற்சியில் நிற்கும் ஒரு இந்திய குடிமகனை அவதூறு செய்ய முயற்சிப்பது, உச்ச நீதிமன்றத்தின் மதிப்புக்குரிய நீதிபதி, ஆளும் கட்சி செய்த, செய்து கொண்டிருக்கும் அந்த செயலில் தன்னை ஒரு பங்காளியாக நிரூபித்துள்ளாரா?’ என்று சரமாரியாக கேட்டுள்ளார்.