இன்று ரேபரேலி செல்கிறார் ராகுல்
Advertisement
ரேபரேலி: மக்களவை தேர்தலில் ரேபரேலி, வயநாடு தொகுதியில் ெவன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, ரேபரேலியை தக்க வைத்தார். வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்தார். அங்கு நவ.13ல் நடக்கும் இடைத்தேர்தலில் அவரது சகோதரி பிரியங்கா போட்டியிடுகிறார். இந்த நிலையில் ரேபரேலி எம்.பி.யான பிறகு முதல்முறையாக மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு(திஷா) கூட்டத்தில் பங்கேற்க இன்று ராகுல்காந்தி ரேபரேலி செல்கிறார்.
இதன்மூலம் ரேபரேலி பகுதியில் உள்ள அதிகாரிகளுடன் முதல்முறையாக அவர் ஆலோசனைநடத்த உள்ளார். அதை தொடர்ந்து சாலைப்பணிகள் உள்பட பல்வேறு பணிகளை அவர் தொடங்கி வைக்கிறார்.
Advertisement