ராகுலுக்கு ஜாமீன் வழங்கியது ஜார்க்கண்ட் நீதிமன்றம்
சைபாசா: கடந்த 2018ம் ஆண்டு ஜார்க்கண்டின் சாய்பாசாவில் நடந்த பேரணியின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து ராகுல்காந்தி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக பிரதாப் குமார் என்பவர் குற்றஞ்சாட்டினார். மேலும் அவர் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த அவதூறு வழக்கானது ராஞ்சியில் இருந்து கடந்த 2021ம் ஆண்டு சாய்சாசாவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில்.சாய்பாசா நீதிமன்றத்தில் நேற்று ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். ராகுல்காந்தி ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். ஆனால் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.