ராகுலுக்கு கொலை மிரட்டல்: மகாதேவ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அமித் ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம்
டெல்லி: ராகுல் காந்தி நெஞ்சில் சுட்டுக் கொல்லப்படுவார் என்ற பாஜக நிர்வாகியின் மிரட்டல் பற்றி புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. டி.வி. நிகழ்ச்சியில் பாஜக செய்தித் தொடர்பாளர் பின்டு மகாதேவ் நேரடியாகவே ராகுலுக்கு மிரட்டல் விடுத்தார். வாய் தவறியோ, உணர்ச்சி வேகத்திலோ மகாதேவ் பேசவில்லை, திட்டமிட்ட மிரட்டல் அது என காங்கிரஸ் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. கொலை மிரட்டல் விடுத்த மகாதேவ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அமித் ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம் அனுப்பியது.
Advertisement
Advertisement