வான் பாதுகாப்பை பலப்படும் பிரான்சிடம் இருந்து 100 ரபேல் விமானங்களை வாங்க உக்ரைன் திட்டம்
கீவ்: வான் பாதுகாப்பை பலப்படும் பிரான்சிடம் இருந்து 100 ரபேல் விமானங்களை வாங்க உக்ரைன் திட்டமிட்டுள்ளது. நேட்டோவில் இணைய முயற்சி செய்யும் உக்ரைன் மீது ரஷ்யா 2022ம் ஆண்டு போர் தொடுத்தது. ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் 3ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகின்றது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இருநாடுகளுக்கு இடையே போரை நிறுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிளும் தோல்வியில் முடிந்தன. இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக இருநாடுகளுக்கும் இடையிலான தாக்குதல் தீவிரமடைந்து வருகின்றது.
வான் பாதுகாப்பை பலப்படும் பிரான்சிடம் இருந்து 100 ரபேல் விமானங்களை வாங்க உக்ரைன் திட்டமிட்டுள்ளது. இதனிடையே உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி பிரான்ஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது; பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்கள் உள்பட ராணுவ உபகரணங்கள் வாங்க உக்ரைன் விருப்பம் தெரிவித்து, பிரான்ஸ் உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஆகியோர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.