இனவெறி தாக்குதல் அதிகரிப்பு அயர்லாந்தில் இந்திய தின கொண்டாட்டம் ஒத்திவைப்பு
லண்டன்: அயர்லாந்தில் வன்முறை சம்பவங்கள் காரணமாக இந்திய தினக்கொண்டாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அயர்லாந்தில் கடந்த சில நாட்களாக இந்தியர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இந்திய குடும்பத்தினர் மீதும் இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் சமீபத்திய வாரங்களில் நடந்த வன்முறை தாக்குதல்களை தொடர்ந்து அயர்லாந்தில் ஆண்டு தோறும் கொண்டாடப்படும் இந்தியா தின கொண்டாட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.