ஊட்டியில் உறைப்பனி துவங்காததால் குயின் ஆப் சைனா மலர் பூப்பதில் தாமதம்
ஊட்டி : ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் குயின் ஆப் சைனா என அழைக்கப்படும் பவுலோனியா பார்சினி மலர் மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் டிசம்பர் மாதத்தில் இந்த மரத்தில் மலர்கள் பூத்துவிடும். வெண்மை கலந்த இளஞ்சிவப்பு நிறத்தில் மரம் முழுவதும் பூத்து காணப்படும்.
Advertisement
இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். ஆனால், இம்முறை கடந்த ஜூன் மாதம் துவங்கிய மழை இதுவரை விட்டபாடில்லை. கடந்த சில மாதங்களாக மேக மூட்டம் மற்றும் சாரல் மழை பெய்து வந்தது.
இதனால் இதுவரை ஊட்டியில் உறை பனி விழாமல் உள்ளது. வழக்கமாக பனிக்காலம் துவங்கினால் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் புவுலோனியா பார்சினி மலர்கள் பூத்துவிடும். ஆனால், மழை காரணமாக இம்முறை இதுவரை பூக்காமல் உள்ளது. இதனால், தாவரவியல் பூங்கா வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Advertisement