காலாண்டு விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் கூடாது: அரசு எச்சரிக்கை
சென்னை: 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்புகளுக்கு கடந்த 15ம் தேதி முதல் காலாண்டு தேர்வுகள் நடந்து வருகின்றன. அதேபோல பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வுகள் 10ம் தேதி தொடங்கின. இந்த தேர்வுகள் இன்றுடன் முடிவடைகின்றன.
Advertisement
இதையடுத்து, காலாண்டுத் தேர்வு விடுமுறையை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில், காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் அப்படி நடத்தினால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.
Advertisement