தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதின் - ஜெலன்ஸ்கி அவர்களுடன் நானும் இணைந்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவேன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

 

Advertisement

வாஷிங்டன்: ரஷ்யா, உக்ரைன் இடையே மூன்றரை ஆண்டாக நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி எடுத்து வருகிறார். இதற்காக, கடந்த 15ம் தேதி அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் புடினை, அதிபர் டிரம்ப் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், போர் நிறுத்தம் தொடர்பாக எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை. ஆனால், பல புரிதல்கள் ஏற்பட்டுள்ளதாக இரு தலைவர்களும் கூறினர். இதைத் தொடர்ந்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

அதன்படி, வெள்ளைமாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையேயான சந்திப்பு நேற்றிரவு நடந்தது. இதில், ஜெலன்ஸ்கியுடன் ஐரோப்பிய நாடுகளின் முக்கிய தலைவர்கள், அதிபர்கள் ஆகியோர் பங்கேற்றனர். இந்த சந்திப்பு நடக்கும் நாளை வெள்ளை மாளிகையின் மிக முக்கியமான நாளாக டிரம்ப் குறிப்பிட்டார்.

பேச்சுவார்த்தைக்கு முன்பாக அவர் தனது ட்ரூத் சமூக ஊடக பதிவில், ‘‘ரஷ்யா உடனான போரை உக்ரைன் அதிபர் உடனடியாக முடிவுக்கு கொண்டு வர முடியும். அவர் போரை நிறுத்த வேண்டுமென நினைத்தால் அது முடியும். இல்லாவிட்டால் அதை நீடிப்பதும் அவர் விருப்பம். அதற்கு முன் ஒன்றை அவர் நினைவில் கொள்ள வேண்டும்.

இதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘‘போரை விரைந்து முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறோம். ஆனால் அந்த அமைதி நிலையானதாக இருக்க வேண்டும். முக்கியமாக உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்கள் அளிப்பதில் ஐரோப்பாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா ஒப்புக் கொள்ள வேண்டும்’’ என கூறினார். இரு தரப்பிலும் கடுமையான நிபந்தனைகளுடன் டிரம்ப்-ஜெலன்ஸ்கி சந்திப்பு நடந்தது.

இந்த சந்திப்பிற்கு பிறகு ரஷ்ய அதிபர் புதினை தொலைபேசியில் அழைத்துப் பேசினேன். புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பணிகளை தொடங்கியுள்ளேன். அந்த சந்திப்பு முடிந்தவுடன் அவர்களுடன் நானும் இணைந்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவேன் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

Advertisement

Related News