புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
புதுடெல்லி: கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரத்தில் 41 பேர் பலியானது தொடர்பாக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இருவரும் மனு தாக்கல் செய்தனர்.
Advertisement
இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்து மனுக்களை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, புஸ்ஸி ஆனந்த், மற்றும் நிர்மல் குமார் முன்ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்து உள்ளனர். இந்த மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும் என்று இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்ய உள்ளனர்.
Advertisement