புரட்டாசி மாத பிறப்பை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவிந்து வரும் பக்தர்கள்
திருமலை: புரட்டாசி மாத பிறப்பை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் 31 அறைகளும் நிரம்பி, கிருஷ்ண தேஜா ஓய்வு அறை வரை பக்தர்கள் காத்திருக்கின்றனர். சாமி தரிசனத்துக்கு சுமார் 2 கி.மீ. தூரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரம் வரை காத்திருக்க நேரலாம் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. டோக்கன் பெற்றவர்கள் 7 மணி நேரம் ரூ.300 தரிசன டிக்கெட் பெற்றவர்கள் 3 மணி நேரம் காத்திருக்க நேரிடும்.
Advertisement
Advertisement