பஞ்சாபில் இருந்து கேரளாவுக்கு கூரியரில் போதை பொருள் கடத்தல்: பார்சலை வாங்க வந்த வாலிபர் கைது
இதைக்கண்டதும் தயாராக இருந்த போலீசார் உடனே அருகில் சென்று வாலிபரை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். அந்த பார்சல் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இருந்து அனுப்பப்பட்டிருந்தது. மேலும் பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் கம்ப்யூட்டர் யூபிஎஸ் இருந்தது . போலீசார் அந்த கம்ப்யூட்டர் பாகத்தை பிரித்து பார்த்தபோது, அதற்குள் 87 கிராம் ‘சரஸ்’ போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த போதைப்பொருளை கைப்பற்றிய போலீசார் வாலிபரை கைது செய்து விசாரித்தனர்.
இதில் அவர் திருச்சூர் அருகே உள்ள சாவக்காடு பகுதியைச் சேர்ந்த சரபுதீன் (26) என தெரியவந்தது. விசாரணைக்குப் பின் அவரை போலீசார் திருச்சூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவருக்கு போதைப்பொருள் அனுப்பியது யார்? போதைப்பொருள் கும்பலுடன் சரபுதீனுக்கு தொடர்புள்ளதா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.