சிறுதானியத்தைத் தாக்கும் நூற்புழுக்கள்...
பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதே சிறந்தது என பலரும் செய்து வருகிறார்கள். ஆனால், என்ன மாதிரியான பூச்சி தாக்குகிறது, எந்த பூச்சிக்கு எந்த பூச்சிக்கொல்லி பயன்படுத்துவது போன்ற தெளிவு பலருக்கு இல்லை. அந்த வகையில், சோளத்தை தாக்கும் நூற்புழுக்கள் என்னென்ன, நூற்புழு தாக்கிய பயிர்களின் அறிகுறி எப்படி இருக்கும், பூச்சிக்கொல்லி மருந்து தெளித்த நிலத்தை எப்படி மறுவிதைப்புக்கு பயன்படுத்த வேண்டும் போன்ற தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
சோளத்தை தாக்கும் நூற்புழுக்கள்
ஸ்டிங் நூற்புழு, குட்டைவேர் நூற்புழு, லீசன் நூற்புழு மற்றும் வளைய நூற்புழு போன்ற நூற்புழுக்களுக்கு பிடித்த பயிர் சோளமாகும். இந்த நூற்புழுக்களால் சேதம் கடுமையாக இருப்பதில்லை. ஆனால் ஒரே பயிரை பல வருடங்களுக்குத் தொடர்ந்து பயிர் செய்தால் பாதிப்பு ஏற்படும்.
அறிகுறிகள்
சோளத்தின் வளர்ச்சி குறைதல், அதன் தண்டுகள் மெலிதாகுதல், முதிர்ந்து வருவதற்கு முன்பே மிதமான வெப்பநிலையிலேயே வாடுதல் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு போன்றவை நூற்புழுக்களால் ஏற்படும் அறிகுறிகளாகும். அதேபோல, வளர்ச்சி குறைதல், உற்பத்தி குறைதல் மற்றும் சோளத்தின் அளவு போன்றவற்றிலும் மாறுபாடு உண்டாகும்.
மேலாண்மை
நூற்புழு மேலாண்மைக் கருவியாக சோளத்தை மற்ற பயிர்களுக்கு பயிர் சுழற்சி முறையில் பயிரிடலாம். நச்சு, குட்டை வேர் மற்றும் வேர் நூற்புழுக்களால் பாதிக்கப்பட்ட நிலத்தில் சோளத்தை பயிர் சுழற்சிக்கு பயன்படுத்தக் கூடாது. இருப்பினும் இது பயிர் சுழற்சிக்கு ஏற்ற பயிர். சில நூற்புழுக்களைக் கட்டுப்படுத்துகிறது. பல சோள வகைகள் நூற்புழுக்களை தக்க வைப்பதில்லை. பருத்தி, சோளம் மற்றும் பல காய்கறி பயிர்கள் உற்பத்திக்கு நல்ல மேலாண்மை பயிர்.
நூற்புழுக் கொல்லி
நூற்புழுக் கொல்லி சோளம் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது. அதிக அளவிலான நூற்புழுக்களை தோராயமாக ஆராய்ந்து நூற்புழுக் கொல்லிகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. மக்காச் சோளத்தை விட சோளத்தில் நூற்புழு அளவு குறைவு. மற்ற பயிர்களைப் போல இரசாயன மருந்து அளிப்பது இதில் எளிது மற்றும் அதிக மகசூல் பெறமுடியும்.நூற்புழுக் கொல்லிகளை பயன்படுத்த பல கட்டுப்பாடுகள் உள்ளன.இந்த நூற்புழுக் கொல்லிகள் பயன்படுத்திய நிலத்தில் 90 நாட்களுக்கு சோளத்தை அறுவடை செய்யக் கூடாது. அதேபோல, அறுவடைக்கு முன் கால்நடைகளை மேய விடக்கூடாது. இந்த நூற்புழு பூச்சிக்கொல்லியை நிலத்தில் பயன்படுத்த வேளாண்துறை மற்றும் நுகர்வோர் சேவை நிர்வாகத்திடம் ஒப்புதல் பெற வேண்டும். மேலும், இதனை பயன்படுத்துவதற்கு 30 நாட்கள் முன்பாக இதுகுறித்த பயன்பாட்டு அறிக்கையை வேளாண் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். இதனை, குடிநீர் கிணற்றைச் சுற்றி 300 அடிக்கு பயன்படுத்தக் கூடாது.