புதுக்கோட்டை அருகே ஆம்னி பேருந்தில் கடத்தி சென்ற ரூ.20 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்!!
புதுக்கோட்டை: சென்னையில் இருந்து ஆம்னி பேருந்தில் தொண்டிருக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.20 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை கருவேப்பிலையான் ரயில்வே கேட் அருகே போலீசார் நடத்திய சோதனையில் பணம் சிக்கியது. கமிஷனுக்காக ஹவாலா பணத்தை ஆம்னி பேருந்தில் கடத்தி வந்த சென்னையைச் சேர்ந்த அமீர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement