புதுக்கோட்டையில் 75 சவரன் நகை திருடியவர் கைது!!
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ஆக.5ல் கார்த்திகா என்பவரது வீட்டில் 75 சவரன் நகை திருடிய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 75 சவரன் நகை திருடிய வழக்கில் வெற்றிவேல் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட வெற்றிவேலிடம் இருந்து 57.5 சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். வெற்றிவேல் மீது 20க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement