புதுச்சேரியில் நாளை அக். 3ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை: அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை (அக்டோபர் 3) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் என 4 பிராந்தியங்களிலும் அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை (03.10.2025) வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது
தமிழக அரசுப் பள்ளிகளில் 2025-2026 ஆம் கல்வியாண்டுக்கான நாட்காட்டியின் படி காலாண்டுத் தேர்வுகள், செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற்றன. இதையடுத்து பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடுக்கப்பட்டது. காலாண்டு விடுமுறைகள் முடிந்த பின்னர் அக்டோபர் 06 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
இதனிடையே ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு கூடுதலாக நாளை (அக்டோபர் 03) புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில கல்வித்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதுவை மாநில பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறி இருப்பதாவது: அக்டோபர் 1ஆம் தேதி வியாழக்கிழமை சரஸ்வதி பூஜை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து, இன்று அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அரசு விடுமுறையாகும். இந்த நிலையில், ன் மற்றும் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறையும் சனி ஞாயிறு ஏற்கனவே விடுமுறை இருந்தது
இதில், வெள்ளிக்கிழமை மட்டும் பணி நாளாக இருந்தது. அரசு ஊழியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் வெளியூர் சென்று இருப்பதால், அவர்களின் வசதிக்காக வெள்ளிக்கிழமை அக்டோபர் 3 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து 5 நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை ஆகும். திங்கள்கிழமை அக்டோபர் 6ஆம் தேதி வழக்கம் போல பள்ளி கல்லூரிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.