புதுச்சேரியில் இருந்து திருவாரூருக்கு காரில் கடத்திய 600 மதுபாட்டில்கள் பறிமுதல்
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியில் பேரளம் போலீசார் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த காரை நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் காரை நிறுத்தி விட்டு டிரைவர், அவருடன் வந்த மற்றொருவர் தப்பியோடி விட்டனர். இதையடுத்து அந்த காரில் போலீசார் சோதனை நடத்தினர். அதில், 750 மி.லி அளவுடைய 600 எண்ணிகையிலான புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
Advertisement
இதையடுத்து 600 மதுபாட்டில் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிந்து மது கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் யார், காரின் உரிமையாளர், மதுபாட்டில்களை ெமாத்தமாக விற்பனை செய்த கடை உரிமையாளர் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Advertisement