புதுச்சேரியில் மீண்டும் காமராஜர் கல் வீடு திட்டம் கொண்டு வரப்படும்: முதலமைச்சர் ரங்கசாமி
துறை செயலாளராக இருந்த வல்லவன் பல அரசியல் செய்து அந்த மன்றத்தை நிரந்தரமாக மூடிவிட்டார். எனவே புதுச்சேரி முதலமைச்சர் இதற்கு ஒரு தீர்வு கண்டு மீண்டும் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் மானிய விலையில் லேப்டாப் வழங்க வேண்டும். நீண்ட நாட்களாக பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு இலவச மனை பட்டா வழங்க வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் போலி பத்திரிகையாளர்கள் உலா வருகின்றனர். அவர்களை அரசு கண்டு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பேசினார். இத்தகைய பட்ஜெட் மீதான விவாதத்துக்கு இன்று பதிலளித்துப் பேசிய முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரியில் மீண்டும் காமராஜர் கல் வீடு திட்டம்
காமராஜர் கல் வீடு திட்டத்துக்கான நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். பிரதமர் வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ. 2.25 லட்சம் வழங்கப்படுகிறது அதையும் உயர்த்தி ரூ.5 லட்சமாக வழங்கப்படும். புதுச்சேரிக்கு புதிய சட்டமன்றம் கட்டப்பட வேண்டும் என்பது நமது எண்ணம். புதுச்சேரிக்கு புதிய சட்டமன்றம் கட்டுவதற்கான நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்.
புதுச்சேரியில் பத்திரிகையாளர் ஓய்வூதியம் உயர்வு
புதுச்சேரியில் பத்திரிகையாளர் ஓய்வூதியம் ரூ.10,000-லிருந்து -ரூ.15,000ஆக உயர்த்தி வழங்கப்படும். விடுபட்ட பத்திரிகையாளர்களுக்கு இடம் தேர்வு செய்து விரைவில் வீட்டு மனைப்பட்டா வழங்கப்படும். பத்திரிகையாளர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி பேரவையில் அறிவித்தார்.