புச்சிபாபு கிரிக்கெட்: முதலிடம் பிடித்த தமிழக அணிகள்
சென்னை: அகில இந்திய புச்சிபாபு கிரிக்கெட் போட்டியின் 3வது மற்றும் கடைசி லீக் சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. தமிழ்நாடு கிரிக்கெட் சங்க (டிஎன்சிஏ) அணிகளான டிஎன்சிஏ தலைவர் 11 அணி, சட்டீஸ்கர் அணியுடனும், டிஎன்சிஏ 11 அணி, பெங்கால் அணியுடனும் 3வது சுற்றில் களம் காண உள்ளன. இந்த சுற்று இன்று முதல் நாளை மறுநாள் வரை 3 நாள் டெஸ்ட் போட்டியாக நடைபெறும். இதுவரை நடந்த 2 சுற்றுகளில் 2 தமிழ்நாடு அணிகளும் தலா ஒரு வெற்றி, தலா ஒரு டிரா செய்துள்ளன. எனினும் 2 அணிகளும் டிரா செய்த ஆட்டங்களில் முதல் இன்னிங்ஸ் முன்னிலை காரணமாக கூடுதல் புள்ளிகள் பெற்றன. எனவே ஏ பிரிவில் டிஎன்சிஏ தலைவர் 11 அணியும், சி பிரிவில் டிஎன்சிஏ 11 அணியும் முதல் இடத்தில் உள்ளன.
Advertisement
Advertisement