புச்சிபாபு கிரிக்கெட் இன்று முதல் அரையிறுதி
சென்னை: அகில இந்திய புச்சிபாபு கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று சென்னையில் தொடங்குகின்றன. லீக் சுற்று 3 நாட்கள் ஆட்டங்களாக நடந்த நிலையில் அரையிறுதி, இறுதிப் போட்டிகள், 4 நாட்கள் ஆட்டங்களாக நடைபெறும். முதல் அரையிறுதியில் ஏ பிரிவில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்க(டிஎன்சி) அணியான டிஎன்சிஏ தலைவர் 11 அணியும், பி பிரிவில் முதலிடம் பிடித்த ஜம்மு காஷ்மீர் அணியும் மோத உள்ளன. 2வது அரையிறுதியில் சி பிரிவில் முதலிடம் பிடித்த அரியானா அணியும், டி பிரிவில் முதலிடம் பிடித்த நடப்பு சாம்பியன் ஐதராபாத் அணியும் களம் காண உள்ளன. இறுதி ஆட்டம் செப்.6 முதல் செப்.9ம் தேதி வரை நடைபெறும். டிஎன்சிஏ சார்பில் களம் கண்ட மற்றொரு அணியான டிஎன்சிஏ 11 அணி சி பிரிவில் 3வது இடம் பிடித்ததால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
Advertisement
Advertisement