தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொதுமக்களிடம் கனிவாக, மரியாதையாக நடந்து காவல்துறையினர் சிறப்பாக, நேர்மையாக பணியாற்ற வேண்டும்: பயிற்சி நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: மக்கள் பிரச்னைகளை நேரடியாக தீர்த்து வைக்க காவல்துறையினர் சிறப்பாக, நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நேரடியாக தேர்ச்சி பெற்ற 24 டிஎஸ்பிக்கள் பயிற்சி நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். குரூப் 1 முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற 9 பெண்கள் உள்பட 24 துணை கண்காணிப்பாளர்களுக்கு வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் மூலம் ஓராண்டு பயிற்சி வழங்கப்பட்டது.
Advertisement

சிறப்பாக பயிற்சி மேற்கொண்ட 24 டிஎஸ்பிக்களுக்கான பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் கலந்துகொண்டு ஓராண்டு பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கினர்.

முதன்னதாக 2024-25ம் ஆண்டு 13வது பிரிவு நேரடி காவல் துணை கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு விழாவில் கலந்துகொள்ள வந்த காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு பேண்டு வாத்தியங்கள், குதிரைப்படை அணி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பயிற்சி முடித்த காவல் துணை கண்காணிப்பாளர்களின் அலங்கார அணிவகுப்பு மரியாதையை டிஜிபி சங்கர் ஜிவால் ஏற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தின் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தின் கூடுதல் டிஜிபி தேன்மொழி, தமிழ்நாடு சட்டம் -ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், ஐஜி பாலகிருஷ்ணன் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பேசியதாவது:

காவல் பணி என்பது மக்கள் பிரச்னைகளை நேரடியாக தீர்த்து வைக்கின்ற மிக உன்னதமான பணி. ஒவ்வொருவரும் பொதுமக்களிடம் கனிவாக, மரியாதையாக நடந்து, அவர்களுடைய குறைகளை பொறுமையாக கேட்கவேண்டும். அவர்களுக்கு நியாயமான, நேர்மையான சேவையை விரைந்து வழங்க வேண்டும். பீல்டுக்கு செல்கின்ற இந்த நேரத்தில், எப்படி பிட்டாக இருக்கிறீர்களோ, அதேபோல, நீங்கள் எப்போதும் பிட்டாக இருக்கவேண்டும்.

காவல் துறையில் சிறப்பாக, நேர்மையாக பணியாற்றி, நீங்கள் மேலும், மேலும் பதவி உயர்வுகளைப் பெற்று, மக்கள் சேவையில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன். நான் மீண்டும் உங்களை சந்திக்கும்போது, பீல்டுக்கு செல்லும்போது, நீங்கள் வழங்கிய ஆலோசனைகளின் பேரில், சிறப்பாக மக்கள் பணியாற்றுகின்றோம் என்று நீங்கள் ஒவ்வொருவரும் சொன்னால், அதுவே எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி. தமிழ்நாட்டு மக்களுக்கு துணையாகவும், சட்டம், ஒழுங்கு நிலைநாட்டுவதில், மிகுந்த அக்கறையோடும் நீங்கள் அனைவரும் திட்டமிட்டு, திறம்பட செயல்பட வேண்டும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

Advertisement