பொது ஒழுங்குக்கு அச்சுறுத்தல் போலி செய்திகளை தடுக்க விதிகளை திருத்த வேண்டும்: நாடாளுமன்ற குழு பரிந்துரை
புதுடெல்லி: நாட்டிலுள்ள செய்தி தொலைக்காட்சிகள், பல்வேறு அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் போலியான செய்திகள் பரவுவதை தடுக்க பாஜ நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே துபே தலைமையில் நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டது.
Advertisement
அந்த குழு அளித்துள்ள அறிக்கையில், பரிந்துரை அறிக்கையில், “போலி செய்திகள் பொது ஒழுங்கு மற்றும் ஜனநாயக செயல்முறைகளுக்கு கடுமையான அச்சுறுத்தல். இந்த பிரச்னையை சமாளிக்க தண்டனை விதிகளை திருத்துதல், அபராதங்களை அதிகரிப்பது மற்றும் பொறுப்புணர்வை நிர்ணயிப்பது உள்ளிட்டவை அவசியம். மேலும், போலி செய்திகள் தொடர்பான சவால்களை சமாளிக்க அரசு, தனியாரை உள்ளடக்கிய உண்மை சரி பார்ப்பு குழுவின் கூட்டு முயற்சி அவசியம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement