பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண அறிவுறுத்தல்!!
04:51 PM Aug 08, 2025 IST
சென்னை: பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண அரசு அலுவலர்களுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். அனைத்து அலுவலகங்களிலும் குறை களைவு மனுப் பதிவேடு பராமரிக்கவும், மாத இறுதியில் பதிவேட்டை ஆய்வு செய்து விரைந்து மனுக்களுக்கு தீர்வு காணவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வருடாந்திர துறை ரீதியான ஆய்வுகளின்போது பதிவேட்டை ஆய்வு செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.