போராட்ட வழக்கு அமைச்சர் விடுவிப்பு
கடலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சன்னாசி நல்லூருக்கும், கடலூர் மாவட்டம் நெய்வாசலுக்கும் இடையே வெள்ளாறில் அரசு மணல் குவாரியை கடந்த 2015ல் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதில் அப்போதைய குன்னம் தொகுதி எம்எல்ஏவும், தற்போதைய அமைச்சருமான சிவசங்கர் கலந்துகொண்டார். அப்போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக போலீசார், அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த கடலூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுபத்ரா தேவி, அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து நேற்று தீர்ப்பளித்தார்.
Advertisement
Advertisement