தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மழை காலத்தில் நம்மையும், பயிர்களையும் காத்துக் கொள்வது எப்படி?

*மருத்துவர்கள், வேளாண் அதிகாரிகள் ‘டிப்ஸ்’

Advertisement

திண்டுக்கல் : தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ளதால் திண்டுக்கல் மாவட்டம், மலைகள் சூழ்ந்து பசுமையாகவும், சில்லென்ற சீதோஷ்ண நிலையும் இருப்பதன் காரணமாக பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும்.

இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பால், மாவட்டத்தில் உள்ள நதிகள், குளங்களில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இந்த பருவகால சீதோஷண நிலை மாற்றத்தால் அனைவரும் பாதிக்கப்பட்டாலும், குறிப்பாக குழந்தைகளும், முதியவர்களும் பலநோய்களால் பாதிப்பிற்குள்ளாகின்றனர். மழைக்காலங்களில் அனைவரும் பாதிக்கப்பட்டாலும், குறிப்பாக குழந்தைகளும், முதியவர்களும் பலநோய்களால் பாதிப்பிற்குள்ளாகின்றனர்.

இதிலிருந்து தப்பிப்பது குறித்து மருத்துவர்கள் கூறியதாவது, பெரும்பாலான நோய் தொற்று மற்றும் நோய்கிருமிகள் பரவுவது நீரின் மூலமாகத்தான். மழை காலத்தில் தேங்கும் நீரின் காரணமாக நோய் கிருமிகள் விரைவில் வர வாய்ப்பிருக்கிறது.

முக்கியமாக மலேரியா, டெங்கு, மற்றும் சளித்தொல்லை போன்றவையும், காலரா போன்ற தொற்றுநோய்களும் அதிகளவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அலர்ஜியின் காரணமாக ஏற்படக்கூடிய நுரையீரல் நோய்கள் இக்காலங்களில் அதிகளவு ஏற்படும். வாத நோய்கள் அதிகமாவதும் மழை காலத்தில்தான்.

மூக்கில் நீர்வடிதல், தலைபாரம், மூக்கடைப்பு, உடல்வலி, இதனுடன் கூடிய காய்ச்சல் அதிகம் ஏற்படுவதும் இக்காலத்தில்தான். இது குடும்பத்தில் ஒருவருக்கு வந்தால் மற்றவரையும் தொற்றிக்கொள்ளும். எனவே, வீடுகளில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நன்கு காய்ச்சிய நீறையே பருக வேண்டும்.

கூடியவரையில் உணவுகளை சூடான பதத்திலேயே உண்ண வேண்டும். மழை காலங்களில் வெளியில் செல்லும்போது அவசியம் காலணி அணிய வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்படும்போது, எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.

சூடான சூப், ஓட்ஸ் கஞ்சி, கிச்சடி, பருப்பு குழம்பு ஆகியவற்றை சாப்பிடுவது ஆரோக்கியமானது. மேலும், வைட்டமின் சி, ஆன்ட்டி ஆக்சிடென்ட், ஜின்க் மற்றும் புரதச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், தானியங்களை எடுத்து கொண்டால் விரைவில் காய்ச்சலில் இருந்து நிவாரணம் பெறலாம்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணெயில் பொறித்த உணவுகள், காரமான உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், இனிப்பு உணவுகள், ஐஸ்க்ரீம், தயிர், ஜூஸ் ஆகியவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும். மேலும் சர்க்கரை நோயாளிகள் சளி, இரும்பல் சிரப் எடுத்துக்கொள்ளும்போது கவனமாக இருத்தல் வேண்டும். ஏனெனில் அவற்றின் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கலாம்.

மழைக்காலத்தில் காது நோய்களும் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, பயணத்தின்போது காதில் பஞ்சை வைத்துக் கொள்ளலாம். தினமும் ஒருமுறையேனும் அவசியம் குளிக்க வேண்டும். தலைமுடி வறட்சி அடையாவண்ணம் தேங்காய் எண்ணை தடவிக் கொள்ளலாம். சபருத்தி மற்றும் கதர் உடைகளை அணிவது நல்லது. ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் காய்ச்சல் குணமாகிவிட்டால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோருக்கு மோசமான பாதிப்புகளை தரக்கூடிய அறிகுறி ஏற்படலாம். நீர்சத்து குறைபாடு, மயக்கம், வயிற்று வலி, உடல் வீக்கம், தோல் அலர்ஜி ஆகிய அறிகுறி இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் செல்வது நல்லது. மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றினால், காய்ச்சலில் இருந்து விரைவாக குணமாகலாம் என தெரிவித்துள்ளனர்.

* மழைக்காலத்தில் பயிர்களில் தோன்றும் நோய்களான வாடல், வேரழுகல் தண்டமுகல் மற்றும் பியூசேரியம். ரைசக்டோனியா ஸ்கிளிரோசியம் ஆகிய பூஞ்சாணங்களை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். வேதியியல் முறையில் கார்பன்டசிம் மருந்தை 1 கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து விதைநேர்த்தி செய்து விதைக்கலாம்.

மேலும் கார்பன்டசிம் (பெவிஸ்டின்) மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து பாதிக்கப்பட்ட செடிகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள செடிகளின் தூர்களில் ஊற்றி மண் மூலம் தோன்றும் நோய்களான வாடல் மற்றும் வேரழுகலை கட்டுப்படுத்தலாம்.

மேன்கோசெப் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு லிட்டருக்கு 2 கிராம் தெளித்து இலை மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்தலாம். ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் லிட்டர் தண்ணீருக்கு 0.5 கிராம் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு 1 லிட்டர் தண்ணீருக்கு 2.5 கிராம் மருந்தை கலந்து தெளிப்பதின் மூலம் பாக்டீரியாவால் தோன்றும் நோய்களை கட்டுப்படுத்தலாம். அவ்வப்போது வயலைப் பார்வையிட்டு நோயுற்ற செடிகளை பிடுங்கி எரித்து விடவேண்டும். நோயுற்ற நாற்றுக்களை நடுவதற்கு பயன்படுத்தக்கூடாது.

மேலும் அளவான தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் அதிகமாண சாம்பல்சத்து அளிப்பதன் மூலம் நோய் தாக்கத்தை குறைக்கலாம்.உயிரியல் முறையில் பருத்தி, பயறுவகைகள், எண்ணெய் வித்துப்பயிர்கள், காய்கறிகள், மலர்கள் மற்றும் பழப்பயிர்கள் ஆகியவற்றில் நோய்களை கட்டுப்படுத்த 2.5 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி அல்லது பேசில்லஸினை 50 கிலோ மக்கிய உரத்துடன் கலந்து 10-15 நாட்கள் நிழலில் வைத்திருந்து இடுவதின் மூலம் வேரழுகலையும், வாடல் நோய்களையும் கட்டுப்படுத்தலாம்.

வேப்பம் புண்ணாக்கு எக்டருக்கு 250 கிலோ இடும்போது மண்ணில் தோன்றும் நோய்கள் கட்டுப்படுத்தப்படுகிறது. மேற்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி பயிர்களில் நோயை கட்டுபடுத்தி விளைச்சலை அதிகரிக்குமாறு வேளாண்மை துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆறிப்போன பழைய உணவுகளால் ஆபத்து

சித்த மருத்துவர்கள் கூறியதாவது, ‘வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, டைபாய்டு காய்ச்சல், எலிக்காய்ச்சல், புளு வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா, காலரா போன்றவை மழைக்கால நோய்களாகும். மழைக்காலங்களில் லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சல் கால்நடைகள் மற்றும் எலிகளின் சிறுநீர் தண்ணீரில் கலப்பதால் மனிதர்களின் தோல்பகுதியின் மூலமாக பரவுகிறது.

இந்த தண்ணீரில் கால் வைப்பதன் மூலமாக காய்ச்சல் ஏற்பட்டு நெடுநாட்கள் விட்டு விட்டு காய்ச்சல், கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பை உண்டாக்கும். இந்த மழைக்கால நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தண்ணீரை காய்ச்சி வடிகட்டி பயன்படுத்த வேண்டும்.

சூடான உணவுப்பொருட்களை உண்ண வேண்டும். ஆறிப்போன பழைய உணவுப் பொருட்களை கட்டாயமாக தவிர்க்க வேண்டும். ஈரப்பதமான மண்ணில் கால் வைப்பதால் சேற்றுப் புண் ஏற்படும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் தங்களது கால்களை மழைக்காலங்களில் முறையாக பராமரிக்க வேண்டும்.

இருமல் சளி போன்றவற்றிற்கு தூதுவளை சூப், கண்டங்கத்திரி லேகியம், ஆடாதோடை கஷாயம் , திரிகடுகு சூரணம். போன்ற சித்த மருந்துகளை பயன்படுத்தலாம்.மழைக்காலங்களில் குளிர்ச்சியான பானங்கள்,குளிர்ச்சி தரும் உணவுகள், எண்ணெய் குளியல், போன்றவற்றைத் தவிர்த்து , உடலுக்கு சிறிது வெப்பம் தரும் மஞ்சள் பால், சீரகம் கலந்த குடிநீர் சுக்கு மல்லி காபி, எலும்பு சூப் போன்றவைகளை அருந்தலாம்’’ என்றனர்.

Advertisement

Related News