புரோ கபடி லீக் தொடர்; புனேரி -பெங்கால் வாரியர்ஸ் அரியானா -யு மும்பா இன்று மோதல்
விசாகப்பட்டினம்: 12 அணிகள் பங்கேற்றுள்ள 12வது சீசன் புரோ கபடி லீக் தொடரின் முதல்கட்ட போட்டிகள் விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 9வது லீக் போட்டியில் தபாங் டெல்லி-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில் டெல்லி 41-34 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-பாட்னா பைரேட்ஸ் மோதின.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜெய்ப்பூர் முதல் பாதியில் 21-16 என முன்னிலை பெற்றது. 2வது பாதியில் பாட்னா சிறப்பாக ஆடி புள்ளிகளை சேர்த்தது. இதில் பாட்னா 20, ஜெய்ப்பூர் 18 புள்ளிகள் எடுத்தன. முடிவில் 39-36 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் வெற்றி பெற்றது. அந்த அணியின் ரெய்டர் நிதின்குமார் அதிகபட்சமாக 13 புள்ளி எடுத்தார். இன்று இரவு 8 மணிக்கு புனேரி பால்டன்-பெங்கால் வாரியர்ஸ் , இரவு 9 மணிக்கு அரியானா ஸ்டீலர்ஸ்-யு மும்பா மோதுகின்றன.