புரோ கபடி லீக் தொடர் பாட்னா பைரேட்ஸ்-யுபி யோத்தா புனேரி - குஜராத் இன்று மோதல்
விசாகப்பட்டினம்: 12 அணிகள் பங்கேற்றுள்ள 12வது சீசன் புரோ கபடி லீக் தொடர் போட்டிகள் விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 5வது லீக் போட்டியில் யு மும்பா 36-33 என தமிழ் தலைவாஸ்அணியை வீழ்த்தி 2வது வெற்றி பெற்றது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து முன்னிலை வகித்த தமிழ்தலைவாஸ் கடைசி 4 நிமிடத்தில் மோசமான செயல்பட்டால் வெற்றியை பறிகொடுத்தது.
தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் பெங்கால் வாரியர்ஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் மோதின. இதில் தொடக்கத்தில் இருந்தே முன்னிலையில் நீடித்த பெங்கால் முதல் பாதியை 23-19 என முடித்தது. 2வது பாதியிலும் ஆதிக்கம் செலுத்தியது. முடிவில் 54-44 என பெங்கால் வெற்றிபெற்றது. அந்த அணியின் ரெய்டர் தேவாங்க் 21, மன்பிரித் பர்தீப் 13 புள்ளிகள் குவித்தார். இன்று இரவு 8 மணிக்கு பாட்னா பைரேட்ஸ்-யுபி யோத்தா, இரவு 9 மணிக்கு புனேரி பால்டன்- குஜராத் ஜெயன்ட்ஸ் மோதுகிறது.