தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாட்டுக்கோழியில் தெறி லாபம்... பள்ளி ஆசிரியரின் அசத்தல் யுக்திகள்!

தருமபுரி சுற்றுவட்டாரத்தில் தண்ணீர் குறைவாக இருப்பதால் விவசாயத்திற்கு பதிலாக பல விவசாயிகள் மாற்று வழிகளைத் தேடி வருகிறார்கள். தற்போது நாட்டுக்கோழிகளுக்கு நல்ல மவுசு இருப்பதால் அவற்றை வளர்க்கத் தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் தர்மபுரி அடுத்த நல்லம்பள்ளி ஆதனூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவர் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் அரசுப்பள்ளி ஆசிரியராகும் முனைப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இது ஒருபுறமிருக்க நாட்டுக்கோழி வளர்ப்பில் அசத்தலான லாபம் பார்த்து வருகிறார். தனது பண்ணையில் கோழிக்குஞ்சுகளுக்கு தீவனம் அளித்துக்கொண்டிருந்த முனுசாமியைச் சந்தித்துப்பேசினோம்.

Advertisement

`` ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறேன். இந்தப் பணியில் இருந்தாலும் அரசுப்பள்ளியில் ஆசிரியராக வேண்டும் என்ற எண்ணத்தில் முனைப்புடன் தயாராகி வருகிறேன். அப்பா கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வந்ததால் எனக்கு சிறுவயதில் இருந்தே கோழி வளர்ப்பில் அதிக நாட்டம். அதிலும் நாட்டுக்கோழி ரகத்தில் பெருவிடை, சிறுவிடை, கருங்கோழி, வான் கோழி, பேன்சி கோழிகளை விரும்பி வளர்ப்பேன். கோழிகளை வளர்த்து உற்பத்தி செய்து கொண்டே இருந்தேன். இதை எப்படி விற்பனை செய்வது என்பதில் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினேன். இன்றைக்கு தென் மாவட்டங்கள், கொங்குப்பகுதி மட்டுமின்றி வடக்கு மாவட்டங்களிலும் கோழிகளை நேரடியாக விற்பனை செய்து வருகிறேன். நாம் வீட்டில் வளர்க்கும் கோழிகளுக்கும் பண்ணை மூலம் வளர்க்கும் கோழிகளுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. கோழிகளுக்கு எந்தளவுக்கு இயற்கை முறையில் தீவனம் கொடுக்கிறோமோ அதைப் பொருத்துதான் கோழிகளின் வளர்ச்சி இருக்கும் என்பதை அறிந்துகொண்டேன். கோழிகளுக்கு என்று பிரத்தியேகமாக இரண்டு அளவுகளில் கொட்டகை அமைத்துள்ளேன். ஒவ்வொரு கொட்டகையும் 120×20 அடி பரப்பளவில் இருக்கும். ஒவ்வொரு கூரையைச் சுற்றியும் கம்பிகளைக் கட்டி வைத்திருக்கிறேன். கொட்டகையைச் சுற்றி துணிகள் போர்த்தி வைத்திருப்பேன். கொட்டகையில் ஜோடிக்கோழிகள், ஒரு வார கோழிக்குஞ்சுகள், வளர்ந்த கோழிகள், குஞ்சுகளுடன் மேய்ச்சலில் இருக்கும் பெட்டைக்கோழி என்று பிரித்து வைத்திருக்கிறேன்.

காலநிலையை பொருத்து தீவனம் கொடுப்பது, தண்ணீர் வைப்பது, உரிய நேரத்தில் மேய்ச்சலில் விடுவது போன்றவற்றை கவனிக்க வேண்டும். கோழிக்குஞ்சுகளைப் பொருத்தவரையில் அதிக வெளிச்சம் காட்டினால் அவை தீவனம் எடுத்துக்கொள்ளாது. அதனால் அவற்றை இருட்டு இருக்கும் பகுதிகளாய் பார்த்து அடைப்போம். காலையில் 6 மணிக்கு கோழிகளை மேய்ச்சலுக்கு திறந்துவிடுவோம். அனைத்து கோழிகளும் நல்ல மேய்ச்சலில் இருக்கிறதா? என்பதை கவனிப்பேன். அதன்பிறகு 11 மணியளவில் கம்பு, ராகி, சோளம், கோதுமை, அரிசி என்று கோழிகளுக்கு தீவனம் கொடுப்போம். மாலையில் அடைய வரும் கோழிகள் சரியான அளவில் உணவு எடுத்துள்ளனவா? என்பதை கவனித்துக்கொள்வேன். அதேபோல் காலையில் கோழிகளை மேய்ச்சலுக்கு திறந்து விட்ட பின்பு கூண்டுகளை சுத்தம் செய்துவிடுவேன். பண்ணையைச் சுற்றிலும் இயற்கை முறையில் விளைந்த மூலிகைச்செடிகள் உள்ளன. இவற்றைக் கோழிகள் சாப்பிடுவதால் நோய்கள் வருவதில்லை. இதுபோக உரிய காலத்தில் போட வேண்டிய தடுப்பூசியும் போட்டு வருகிறேன். அதேபோல் கோழிகளுக்கு நாங்கள் கடலைப் புண்ணாக்கை ஊற வைத்துக் கொடுப்போம். இதில் அதிகமான சத்துகள் இருப்பதால் கோழிகள் நன்கு ஊட்டமாக வளரும். கோழிகள் இந்தக் கடலைப் புண்ணாக்கை விரும்பி சாப்பிடும். கோழிகள் அனைத்தும் வெளியில் சென்று மேய்வதால் பூச்சி, புழுக்கள், கரையான்களை உண்ணுகின்றன. இதனால் அவற்றுக்கு நல்ல புரதசத்து கிடைக்கிறது.

வளர்ந்த கோழிகளை நேரடியாக விற்பனை செய்கிறேன். கோழிக்குஞ்சுகளின் ரகத்தைப் பொருத்து விற்பனையில் மாற்றம் இருக்கும். தற்போது 45 நாட்கள் வளர்ந்த கோழிகுஞ்சுகளைத்தான் நான் விற்பனை செய்து வருகிறேன். நாட்டு கோழிக்குஞ்சு, கருங்கோழி, சோனாலி, கிரிராஜா உள்ளிட்ட ரகங்களை ரூ.100க்கு விற்பனை செய்கிறேன். பேன்சி கோழிக்குஞ்சுகளை ரூ.150க்கும், வெள்ளை வாத்துக்குஞ்சுகளை ரூ.130க்கும், பெருவிடை கோழிக்குஞ்சுகளை ரூ.110க்கும் விற்பனை செய்து வருகிறேன். சராசரியாக ஒரு மாதத்தில் நாட்டுக்கோழியில் 4000 குஞ்சுகளும், கருங்கோழியில் 500 குஞ்சுகளும், வான்கோழியில் 500 குஞ்சுகளும், கிரிராஜாவில் 500 குஞ்சுகளும், வெள்ளை வாத்தில் 500, சோனாலியில் 1000, பெருவிடையில் 1500, பேன்சி கோழிக்குஞ்சுகளில் 500 என்ற கணக்கில் விற்பனை ஆகும். ஒரு மாதத்தில் கோழிக்குஞ்சுகளை விற்பனை செய்வதில் மட்டும் எனக்கு சராசரியாக ரூ.9 லட்சம் வருமானமாக கிடைக்கிறது. இதில் மருந்து செலவு, பராமரிப்பு, தீவன செலவு, வண்டி வாடகை, ஆட்கள் கூலி என ரூ.7 லட்சம் போக ரூ.2 லட்சம் லாபமாக கிடைக்கிறது’’ என்று

புன்னகையுடன் கூறினார்.

தொடர்புக்கு:

முனுசாமி: 99408 05157

63748 13237.

நோய் பராமரிப்பு

கோழிகளுக்கு நோய் தாக்காமல் கண்ணும் கருத்துமாக பார்ப்பது முக்கியம். தமது நோய் பராமரிப்பு குறித்து முனுசாமி கூறுகையில், `கோழிகளின் மிகப்பெரிய பிரச்சனையாக கழிசல் நோய் விளங்குகிறது. இந்த நோய் தாக்கிய கோழிகளுக்கு மஞ்சள், இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு, வெற்றிலை, குப்பமேனி தழை, கீழாநெல்லி, சின்ன வெங்காயம் ஆகியவற்றை மிக்சியில் அரைத்துக் கொடுப்பேன். அதேபோல் மெரிக்கியூன் 50 என்ற மாத்திரையை சுடுதண்ணீரில் கலந்து, அதோடு எலக்ட்ரால் குளுகோஸ் தண்ணீரையும் கலந்து கொடுப்பேன். இந்த நேரத்தில் கோழிகளால் உணவு எடுக்க முடியாது. அதனால் நன்கு வேகவைத்த சாப்பாட்டை கோழிகளுக்கு தருவோம். இது எளிதில் ஜீரணம் ஆகும். கோழிகளுக்கு தேவையான சத்தும் கிடைக்கும்’ என்கிறார்.

சிறுதலை பூச்சிக்கொல்லி கரைசல்!

தேவையான பொருட்கள்:

பூண்டுச் சாறு - 200 மில்லி

இஞ்சிச் சாறு - 200 மில்லி

பச்சை மிளகாய் சாறு - 200 மில்லி

நீர் - 10 லிட்டர் (கரைக்க)

உடனடி பயன்பாட்டுக்கு

பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக நன்றாக அரைத்து சாறு எடுக்கவும். பின்னர் மூன்றையும் சம அளவில் கலந்து 10 லிட்டர் தண்ணீரில் 50, 60 மில்லி அளவு கலந்து தெளிக்கவும் .ஒருமுறை தயார் செய்த கரைசலை பல நாட்களுக்கு சேமித்து வைக்க, அரைத்த மூன்று சாறுகளையும் ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி ஜாரில் 2 நாட்கள் நிழலில் வைத்து நன்கு பதப்படுத்தி வைக்கலாம். இந்த பதப்படுத்தப்பட்ட கரைசலை 10 மில்லி என்ற கணக்கில் எடுத்து 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.சிறுதலை பூச்சிக்கொல்லி கரைசலில் பல நன்மைகள் உள்ளன. இந்தக் கரைசல் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காது. ரசாயனம் இல்லாததால் விவசாயிகளுக்கு பாதுகாப்பானது. பயிரின் இயற்கை வளர்ச்சியை பாதிக்காது. நீண்ட நாட்களுக்கு பூச்சிகளை கட்டுப்படுத்தும். வெள்ளை ஈ, இலை வண்டு, தும்பை வண்டு, எறும்புகள் உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. பூண்டுசாறு மற்றும் இஞ்சிசாற்றில் உள்ள நுண்ணுயிரிகள், பயிர்களின் இலைகளில் இருக்கும் உயிரணுக்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும்.

 

Advertisement