பேராசிரியர்கள் தாமதமாக வருவதை தடுக்க பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அறிமுகம்: அனைத்து பல்கலைகளுக்கு சுற்றறிக்கை
Advertisement
அந்த சுற்றறிக்கையில், பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், அலுவலர்கள் பணிக்கு தாமதமாக வருவதையும், உரிய அதிகாரியிடம் அனுமதி பெறாமல் அலுவலகத்தை விட்டு வெளியே செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். பல்கலைக்கழகங்கள் சுமுகமாக செயல்படும் வகையில் அனைத்து பல்கலைக் கழகங்களிலும் பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் வருகையை உறுதி செய்வதற்காக பயோமெட்ரிக் வருகை பதிவு முறையை பல்கலைக்கழக நிர்வாகங்கள் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Advertisement