தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடன் தொல்லையால் விபரீத முடிவு காரைக்குடியில் காதலன் புதுகையில் காதலி தற்கொலை

காரைக்குடி: கடன் தொல்லையால் காரைக்குடியில் காதலன் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து புதுக்கோட்டை தனியார் கல்லூரியில் இருந்த காதலியும் தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி, சங்கிலியாண்டவர்புரம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (27). இவர், திருச்சியில் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வழங்கும் பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஐஸ்கேணி வீதியில் வசிப்பவர் சுபஸ்ரீ (20). புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
Advertisement

கடந்த ஓராண்டுக்கு முன்பு புதுக்கோட்டையில் உறவினரின் நிகழ்ச்சிக்காக சுபஸ்ரீ சென்றிருந்தார். அப்போது முத்துக்குமாருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி வெளியூர் சுற்றுலா சென்றதாகவும், இதற்காக முத்துக்குமார் சிலரிடம் கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் காரைக்குடியில் உள்ள வீட்டிற்கு வந்திருந்த முத்துக்குமார், நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இத்தகவலை கல்லூரி விடுதியில் இருந்த சுபஸ்ரீயிடம் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அறைக்குள் சென்ற சுபஸ்ரீநீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்கவில்லை. சந்தேகம் அடைந்து கதவை உடைத்து பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

* ஒரே சேலையில் தூக்கிட்டு உயிரை மாய்த்த தம்பதி

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காட்டாண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் ரமேஷ் என்கிற குமரவேல்(32), பால் வண்டி டிரைவர். இவரது மனைவி மீனா(20). குழந்தை இல்லை. வீட்டு மாடியில் தனியாக வசித்து வந்தனர். கீழ் வீட்டில் குமரவேலின் பெற்றோர் வசித்தனர். நேற்று காலை குமரவேலின் பெற்றோர் மேலே சென்று பார்த்தபோது அறையில் ஒரே சேலையில் கணவன், மனைவி இருவரும் மின்விசிறி கொக்கியில் தூக்கு போட்ட நிலையில் பிணமாக தொங்கியது தெரிந்தது. இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து தம்பதி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement