தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

75 வயது பிரச்னை‘ஒரு மாதம், ஒரு நபர், 2 முரண்பாடான பேச்சு’: மோகன் பகவத்தை விமர்சித்த காங்கிரஸ்

புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பேசும் போது,’ 75 வயதானால் யாராக இருந்தாலும் பொது வாழ்வில் இருந்து ஓய்வுபெற்று அடுத்தவர்களுக்கு வழிவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டார். இது செப்.17ல் 75 வயதை எட்டும் பிரதமர் மோடியை குறிப்பிட்டு கூறியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் நேற்று பேட்டியளித்த மோகன் பகவத், ‘75 வயதில் நான் ஓய்வு பெறுவேன் என்றோ அல்லது வேறு யாராவது 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று நான் ஒருபோதும் கூறியதில்லை’ என்றார்.

Advertisement

அவரது கருத்தை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று விமர்சனம் செய்துள்ளார். ஜூலை மாதம் மோகன் பகவத் தெரிவித்த கருத்து தொடர்பான ஊடகங்களில் ெவளியான செய்திகளையும், நேற்று முன்தினம் அவர் தெரிவித்த கருத்துக்களையும் டேக் செய்து ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘ஒரு மாதம், ஒரு நபர், இரண்டு முரண்பாடான அறிக்கைகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் வாழ்வில் தலையிட அவர் யார்?

இந்திய குடும்பத்தினர் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியது ஐதராபாத் எம்.பி.யும், ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவருமான அசாதுதீன் ஓவைசி கூறுகையில்,’ மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் இந்த வகையான தலையீடு இருக்கக்கூடாது.

மக்களின் வாழ்க்கையில் தலையிட அவர் யார்? தனது குடும்பத்தைப் பற்றி, கணவரைப் பற்றி, எத்தனை குழந்தைகள் வேண்டும் என்று முடிவு செய்யும் ஒரு பெண்ணை ஏன் சுமையாகக் கருதுகிறீர்கள்? ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பலர் பிரம்மச்சாரி வாழ்க்கை முறையை வழிநடத்துகிறார்கள். அதை நாங்கள் கேட்கிறோமா?’ என்று கேள்வி எழுப்பினார்.

Advertisement