புரோ கபடி லீக்கில் இன்று தபாங் டெல்லி-பெங்கால், யு.பி.யோத்தா-குஜராத் மோதல்
சென்னை: 12வது சீசன் புரோ கபடி லீக் தொடரின் 3ம் கட்ட போட்டிகள் சென்னையில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 71வது லீக் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் 46-29 என அரியானாவை வீழ்த்தி தொடர்ச்சியாக 5வது வெற்றியை பெற்றது. அரியானா தொடர்ச்சியாக 5வது தோல்வியை சந்தித்தது.
Advertisement
தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் புனேரி பால்டன் 37-27 என யு மும்பா அணியை வீழ்த்தி 10வது வெற்றியை ருசித்தது. இன்று இரவு 8 மணிக்கு தபாங் டெல்லி-பெங்கால் வாரியர்ஸ், இரவு 9 மணிக்கு யுபி யோத்தா-குஜராத் ஜெயன்ட்ஸ் மோதுகின்றன.
Advertisement