புரோ ஹாக்கி லீக் தொடர் ஸ்பெயினை வீழ்த்தி இந்தியா அசத்தல்
Advertisement
இரு அணிகளும் சம பலத்தில் மோதியதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. முதல் பாதியில் இரு அணியினரும் தீவிர முயற்சி செய்தும் கோல் போட முடியவில்லை. இருப்பினும் 2வது பாதியில் இந்தியாவின் மந்தீப் சிங், தில்ப்ரீத் சிங் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர். அதன் பின் கடைசி வரை ஸ்பெயின் அணியினரால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதனால் 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
Advertisement