தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சென்னை தனியார் மருத்துவமனையில் கிட்னி கொடுக்க சென்ற இடத்தில் கல்லீரலை எடுத்ததாக புகார்: பள்ளிபாளையம் பெண் பரிதவிப்பு

 

பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தை சேர்ந்த பெண் வறுமை காரணமாக கிட்னியை சென்னை தனியார் மருத்துவமனையில் கொடுக்க சென்ற இடத்தில் கல்லீரலை எடுத்ததாகவும், தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அலமேட்டை சேர்ந்தவர் தேவி(44). இவரது கணவர் பிரிந்து சென்ற நிலையில் 18 வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

சாயப்பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்த தேவிக்கு, போதிய வருமானம் இல்லாததால் அக்கம்பக்கத்தவர்களிடம் கடன் வாங்கினார். ஒரு கட்டத்தில் கடன் சுமை அதிகமாகவே, ஈரோட்டில் உள்ள ஒரு பெண் புரோக்கரிடம் தனது கிட்னியை விற்பதாகவும், அதற்கு ஈடாக பணம் பெற்றுத்தரும்படியும் கேட்டுள்ளார். இதையடுத்து, கடந்த 2022ல் தேவியின் உடல் உறுப்புகள் பரிசோதிக்கப்பட்டு, போதிய ஆவணங்கள் தயார் செய்யப்பட்டது. கிட்னி அறுவை சிகிச்சைக்கு பின், ரூ.8.50 லட்சம் தரப்படுமென உறுதியளிக்கப்பட்டது.

பின்னர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட தேவியை, அங்குள்ள மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். இதில், அப்போது கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காக வந்த நோயாளிக்கு, தேவியின் ரத்த வகை ஒத்துப்போகவில்லை. ஆனால், தனது கடன் சுமை குறித்து தெரிவித்த தேவி, எப்படியாவது கிட்னியை எடுத்துக்கொண்டு பணத்தை தரும்படி கேட்டுள்ளார்.

அதே சமயம், மருத்துவமனையில் கல்லீரல் அறுவை சிகிச்சைக்காக, அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு நோயாளிக்கு கல்லீரல் தேவைப்பட்டுள்ளது. இதனால் தேவியின் ஒப்புதல் பெற்று, அறுவை சிகிச்சை மூலம் அவரது கல்லீரலின் ஒரு சிறு பகுதி அறுத்து எடுத்து, நோயாளிக்கு பொருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக தேவிக்கு மருத்துவமனையிலிருந்து ரூ.5.50 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தேவி, மீண்டும் வேலைக்கு செல்லவில்லை. இதனிடையே, சிகிச்சைக்கு பின்னர் அவருக்கு அடிக்கடி உடல் சோர்வும், அசதியும் ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 2022 நவம்பர் 16ம்தேதி, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் எண்டோஸ்கோபி சோதனை செய்து பார்த்ததில், அறுத்து எடுக்கப்பட்ட தேவியின் கல்லீரல் மீண்டும் வளர்ந்து முழு நிலையை எட்டவில்லை என்பது தெரியவந்தது.

தொடர்ந்து தேவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் அவரது உடல்நிலை தேறவில்லை. இது குறித்து அவர் கூறுகையில், ‘கடன் சுமையை குறைக்க கிட்னி கொடுக்க விருப்பம் தெரிவித்து சென்னையில் தனியார் மருத்துவமனைக்கு சென்றேன். அப்போது நோயாளிக்கு எனது கிட்னி சேரவில்லை. கிட்னி பரிசோதனைக்கு ரூ.1.50 லட்சம் வரை செலவாகி விட்டது.

கிட்னிக்கு பதிலாக கல்லீரலை கொடுத்தால், பேசிய தொகையை தருவதாக தெரிவித்தனர். ஆனால் பேசியபடி பணம் தரவில்லை. ஆபரேசனுக்கு பிறகு எனக்கு உடல்நிலை சரியில்லை. உடல்நிலை பாதிப்பால் என்னால் வேலைக்கு செல்ல முடியவில்லை. எனது குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு அரசு உதவி செய்ய வேண்டும்,’ என்றார்.