தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா வாபஸ் பெற கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கை: தனியார் பல்கலைக் கழக சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் விளைவாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேரவையில் அரசின் கவனத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டத் திருத்த மசோதா வழியாக சமூக நீதி கொள்கையும், இட ஒதுக்கீட்டு நடைமுறைகளும் கைவிடப்படும்.
Advertisement
இது குறித்து பல தரப்பினரும் கூறியுள்ள கருத்துக்களை அரசு பரிசீலித்து, தனியார் பல்கலைக் கழக சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement